Breaking News

சீனாவில் புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை

சீனாவில் புதிய கொரோனா பாதிப்புகள் இல்லை

சீனாவின் உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

உயிர்க்கொல்லியான இந்த வைரஸ் 165-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி உள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயினில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை 169 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு உகானில் கொடிய கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் முதல் முறையாக, சீனாவில் நேற்று கொரோனா வைரசின் புதியபாதிப்பு எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. கொரோனா பாதிப்பால் சீனாவில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,245 ஆக உள்ளது.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் (என்.எச்.சி) தனது தினசரி அறிக்கையில்,நேற்று சீனாவில் கொரோனா வைரஸ் நோயின் புதிய பாதிப்புகள் எதுவும் உள்நாட்டில் பதிவாகவில்லை என்று கூறியுள்ளது.

எவ்வாறாயினும், புதன்கிழமை சீனாவில் மொத்தம் 34 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இவை அனைத்தும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடமிருந்து வந்தவை.

மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://youtu.be/zmlf_nFF2JA

https://youtu.be/5u3JzBgE2w8

Tamil News
Tamilnadu News
World Tamil News

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …