Breaking News
பிரதமர் மஹிந்தவை கொழும்பில் அவசரமாக சந்தித்த வட மாகாண ஆளுநர்

பிரதமர் மஹிந்தவை கொழும்பில் அவசரமாக சந்தித்த வட மாகாண ஆளுநர்

பிரதமர் மஹிந்தவை கொழும்பில் அவசரமாக சந்தித்த வட மாகாண ஆளுநர்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் ஆகியோருக்கிடையில் இன்று (29) முற்பகல் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் இடம்பெற்றதாக பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு முடக்க செயற்பாடுகளின் பின்னர் வடக்கில் மக்களின் இயல்பு வாழ்க்கையினை வழமைக்கு கொண்டுவருதல் தொடர்பில் இதன்போது, பேசப்பட்டுள்ளது.

அத்துடன், சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசிப்பவர்களை தடுத்து நிறுத்துவது தொடர்பிலும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


ட்ரம்பிற்கு பிடியாணை: இன்டர்போலிடம் உதவியைக் கோரும் ஈரான்!

About அருள்

Check Also

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

மாணவர்களின் உணவு தவிர்ப்புப் போராட்டம்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. …