Breaking News
நோர்வேயின் வழமைக்கு மாறான 17.மே கொண்டாட்டங்கள்
படம்:VG

நோர்வேயின் வழமைக்கு மாறான 17.மே கொண்டாட்டங்கள்

நோர்வேயின் வழமைக்கு மாறான 17.மே கொண்டாட்டங்கள்

நோர்வேயின் தேசிய தினமான மே 17. கொண்டாட்டடங்கள் இன்று வழமைக்கு மாறான முறையில் இருந்த போதிலும் பொது இடங்களில் தேசிய உடை அணிந்த மக்களுக்கு குறைவில்லை.

தேசிய நிகழ்வாக கருதப்படும் மன்னரின் மாளிகை முற்றத்தில் நடைபெறும் படை அணிவகுப்புக்கள் மற்றும் சிறுவர் கொண்டாட்டங்கள் இம்முறை நடைபெறவில்லை.

அதர்க்கு பதிலாக இளவரசர் Magnus மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒஸ்லோவிலும் அஸ்கர் பகுதியிலும் திறந்த காரில் பயணம் செய்து மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பெரும்பாலான பாடசாலைகளைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

நோர்வேயின் சுதத்ந்திர சதுக்கம் என்று கருதப்படும் Eidsvolsplass இல் அரச நிகழ்வு இடம்பெற்றது. இதில் பாராளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட அரசியல் கட்சி முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பெரும் அளவிலான மக்கள் குவியும் Karl johans gata போன்ற இடங்களில் மக்கள் கூட்டமாக செல்லாதபோதும் கணிசமான மக்கள் தேசிய உடையில் நடமாடுவதை காண முடிகிறது.

ஒஸ்லோ கடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிய படகுகளின் அணிவகுப்பு இன்றைய கொண்டாட்ட நிகழ்வுகளில் முக்கிய இடத்தை பெற்றிருந்தது. இதில் ஏராளமான அலங்கரிக்கப்பட்ட படகுகள் தனிப்பட்ட குடும்பங்களுடன் கலந்து கொண்டிருந்தன.

பேர்கன், இஸ்தவங்கர், ட்ரொன்ஹெய்ம் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு பாரிய கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை ஆனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று வெயில் கலந்த காலநிலை காணப்படுவதால் மக்கள் வீடுகளுக்கு வெளியில் சிறிய கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

நோர்வேஜியர்களை கடந்து செல்லும் ஒரு பெரும் தொற்றில் அதிக மக்கள் நோய்க்கு உள்ளாகவில்லை என்ற மகிழ்ச்சியும் கூட இந்த தேசிய தினத்தில் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று என aftenposten கட்டுரை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Today rasi palan 18.05.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 18 மே 2020 திங்கட்கிழமைToday rasi palan 18.05.2020 Monday – இன்றைய ராசிப்பலன் 18 மே 2020 திங்கட்கிழமை

நன்றி: oslovoice

About அருள்

Check Also

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்

மியான்மரில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம் முறைகேடு கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நாடாளுமன்ற …