Breaking News
அடி உதவுற மாதிரி அண்ணன்

அடி உதவுற மாதிரி அண்ணன் – தம்பி உதவ மாட்டான்

பிக் பாஸ் போட்டியில் இருந்து ரெட் கார்ட் வாங்கிக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து மகத் வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆத்திரக் கோளாறில் அளவுக்கு மீறி நடந்துக் கொண்ட மகத்தை மக்கள் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், நேரடியாக தனது நண்பர் நடிகர் சிம்புவை சந்தித்தார் மகத்.

அப்போது மகத்தை கன்னத்தில் அடித்து சிம்பு வரவேற்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதைத் தொடர்ந்து தற்போது, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் பாடகி என்.எஸ்.கே.ரம்யா மகத்தை வெளுத்து வாங்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவுக்கு, ‘அடி உதவுற மாதிரி அண்ணன் – தம்பி உதவ மாட்டான்’ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ரம்யா.

இந்த் வீடியோவில், செய்வியா? செய்வியா? என்றுக் கேட்டுக் கொண்டே கையில் இருக்கும் கட்டையால் ரம்யா, மகத்தை தாக்குகிறார்.

அதற்கு மகத், ‘ஐ மிஸ் யூ மும்தாஜ்’, ‘பிக் பாஸ் என்ன காப்பாத்துங்க’, ‘பிசிக்கல் வயலன்ஸ்’ என கத்தி கூச்சலிடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …