Wednesday , April 24 2019
Breaking News
Home / இலங்கை செய்திகள் / வடிசாராய உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது
வடிசாராய

வடிசாராய உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது

Spread the love

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்திலுள்ள பணிச்சங்கேணி சூரிய குடா ஓடை தீவுப் பகுதியில் நீண்ட காலமாக சட்ட விரோதமாக மேற்கொண்டு வந்த வடி சாராய உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்த வடிசாரய உற்பத்தி பொருட்களையும் கோடா எனப்படும் வடிசாரயம் நிரம்பிய 20 பறல்களையும் கைப்பற்றியதாகவும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.ஜ. திசநாயக்கா தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை மாலை வாகரை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நிலையப் பொறுப்பதிகாரி எம்.என்.ஜ. திசநாயக்காவின் ஆலோசனையின் பிரகாரம் வாகரை பொலிஸ் நிலைய பொலிஸ்பரிசோதகர் தலைமையிலான குழு பிரசேத்தின் கடமைபுரியும் காசியப்ப கடல் படையினரின் உதவியுடன் குறித்த பிரதேசத்திற்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது வடிசாரயம் உற்பத்தி செய்வதற்கு தயாராக இருந்த கோடா எனப்படும் வடிசாரய உற்பத்தி பொருள் சுமார் 3600 லீற்றர் அளவு கொண்ட 20 பறல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்ட பொருட்;கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

இன்றைய தினபலன்

இன்றைய ராசிப்பலன் 25 சித்திரை 2019 வியாழக்கிழமை

Spread the loveஇன்றைய பஞ்சாங்கம் 25-04-2019, சித்திரை 12, வியாழக்கிழமை, சஷ்டி திதி பகல் 12.46 வரை பின்பு தேய்பிறை …