Breaking News
Home / தமிழ்நாடு செய்திகள் / மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!
வெங்காயம்

மீண்டும் உச்சத்தை தொட்ட வெங்காய விலை!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

சென்னை கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை மீண்டும் கிலோவுக்கு 80 ரூபாயை தொட்டுள்ளது.

வடமாநிலங்களில் மழைப் பொழிவு காரணமாகவும், விளைச்சல் குறைவு காரணமாகவும் வெங்காயம் விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக 80 ரூபாய் வரைக்கும் விலை உயர்வை தொட்ட வெங்காயம் தற்போது அதே விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கோயம்பேடு வெங்காயம் வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ் கூறியுள்ளார்.

கடந்த வாரத்தை பொருத்தவரை நாசிக் வெங்காயம் 50 ரூபாய் என்ற விலையிலும் ஆந்திரா வெங்காயம் 30 ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வந்தது ஆனால் தற்போது நாசிக் வெங்காயம் 60 முதல் 65 ரூபாய் வரைக்கும் ஆந்திரா வெங்காயம் 40 லிருந்து 45 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை 80 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேபோல் கோயம்பேடு வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் செல்வராஜ், ‘காய்கறிகளை என்றுமே பதுக்கி வைக்க இயலாது. பதுக்கல் காரணமாக வெங்காயத்தின் விலை உயர்வதாக சொல்வது தவறான கருத்து.

மழையின் காரணமாகவும், விளைச்சல் குறைவின் காரணமாகவும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கிறது. ஒரு நாளுக்கு மேல் அதனுடைய விலையை கட்டுக்குள் வைக்க முடியாது’ என்று கூறியுள்ளார்

குறிப்பாக அனைத்து காய்கறிகளும் தற்போது விலை ஏற்றத்துடன் காணப்படுவதாகவும் தக்காளி கிலோ 30 லிருந்து 35 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்

இதையும் பாருங்க :

மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட பரவை முனியம்மா

சுஜித் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய பிக் பாஸ் பிரபலம்.

மூன்று நாள்களில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளது!

திடீரென உயர்ந்த வெங்காய விலை – கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை !


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 5
    Shares

Check Also

மருத்துவமனை

கின்னஸ் சாதனை படைத்த பிரபல பின்னணி பாடகி மருத்துவமனையில் அனுமதி

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!5Shares ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படுபவரும் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை புரிந்தவருமான பிரபலப் பாடகி லதா …