Friday , January 18 2019
Home / இலங்கை செய்திகள் / உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே தேர்தல்

உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே தேர்தல்

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கோரவுள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த உச்ச நீதிமன்றத்தின் கருத்தை கோரிய பின்னரே அவர் பொதுத்தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டவேளை சிறிசேன அரசமைப்பின் 19 வது திருத்தத்தினை மீறி நடந்துள்ளார் என்ற கருத்துக்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே தேர்தல் ஆணையாளர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

Check Also

புதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்!

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …