Breaking News
அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு - எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு – எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்து அதிகரிப்பு

அரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிரான நிலைப்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன.

அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்டமூலத்தை முன்நோக்கி கொண்டுச்செல்ல வேண்டாம் என்று கத்தோலிக்க ஆயர் பேரவை, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கத்தோலிக்க ஆயர் பேரவை நேற்று வெளியிட்ட விசேட அறிக்கையொன்றில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பை இயற்றும் பணிக்கு முன்னுரிமை வழங்குவதே சிறந்ததாகும்.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் அது தொடர்பில் மீள் பரீசிலனை செய்யவேண்டும் எனவும் அந்த பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

இதேநேரம், அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலத்தை மீளபெற வேண்டும் என அமரபுர – ராமன்ன சமகிரி மஹா சங்கம் அறிக்கை ஒன்றின் மூலம் கடந்த தினம் வலியுறுத்தியிருந்தது.

எதிர்க்கட்சிகளும், 20ம் திருத்தத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், ஆளும்கட்சிக்குள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், 20 திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் சட்ட வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைத்துள்ள நிலையில், அதனை எதிர்வரும் 20ஆம் திகதி சபையில் அறிவிக்க உள்ளதாக சபாநாயகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

லடாக்கை சட்ட விரோதமாக இந்தியா உருவாக்கியது – சீனா சர்ச்சையை கிளப்பியுள்ளது

About அருள்

Check Also

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு அதிக மக்கள்தொகையை கொண்ட கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு …