Breaking News

ஒரு அடார் லவ் ஹீரோயினுக்கு பாலியல் தொல்லை? காவல்நிலையத்தில் புகார்; உண்மை நிலை என்ன?

பிரியாவாரியருடன் ஒரு அடார் லவ் படத்தில் நடித்த மிசெல் அன்னுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வந்த செய்தியை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

‘ஒரு அடார் லவ்’ என்ற மலையாளப் படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல் மூலம் உலகப் புகழ்பெற்றவர் இளம் நடிகை பிரியா வாரியர். அந்தப் பாடல் காட்சியில் இடம்பெற்ற பிரியா வாரியரின் கண் அசைவுகள், முக பாவனைகள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தப் படத்தில் பிரியா வாரியருடன் இன்னொரு ஹீரோயினாக நடித்திருப்பவர், மிசெல் அன். இவரது அம்மா அன்னி லிபுவும் இதில் நடித்துள்ளார்.

ஓமர் லுலு இயக்கியுள்ள இந்த ’ஒரு அடார் லவ்’ படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. இதில் ரோஷன் அப்துல் ரஹூப், அஷிஷ் வித்யார்த்தி உட்படப் பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மிசெல் அன் -னின் அம்மாவும் உறவினர்களும் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் மனரீதியாக கொடுமைப் படுத்து வதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கொன்று விடுவார்கள் என்று பயந்து மிசெல் தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்தி வெளியானது. இது தொடர்பாக, மிட்செல் கையெழுத்துடன் எர்ணாகுளத்தில் உள்ள திரிபுனிதுரா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதை மறுத்துள்ளார் மிசெல். தன் அம்மாவும் உறவினர்களும் தன்னைத் தாக்கவில்லை என்றும் பாலியல் தொல்லை ஏதும் இல்லை என்றும் இது தொடர்பான தகவல்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்றும் மிசெல் கூறியுள்ளார். இதை அவர் அம்மாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

‘இந்தப் பொய் செய்தியால் நாங்கள் பாதிப்படைந்துள்ளோம். இதுதொடர்பாக வழக்குத் தொடுக்கலாம் என இருக்கிறோம். ’ஒரு அடார் லவ்’ படத்துக்கு எதிராக இப்படியொரு செய்தி கிளப்பப்படுகிறது என நினைக்கிறோம். அந்தப் படத்துக்கு இது எதிர்மறை விளம்பரத்தைத் தேடி கொடுத்துவிடும். அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லை’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

About அருள்

Check Also

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …