Breaking News
ஓவியா

ஓவியா என்ன சொன்னாங்க தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து நடிகை ஓவியா முதன்முறையாக தனது ரசிகர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்த ஓவியா, ரசிகர்களிடம் பிக் பாஸ் பார்க்கச் சொல்லிவிட்டு சென்றார்.

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்குப்பின், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்த ரசிகர்களின் கேள்விகளுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

பிக் பாஸ் முதல் சீசனில் தனது இயல்பான நடவடிக்கைகளால் பிக் பாஸ் வீட்டிற்குள் எதிர்ப்பையும், மக்களிடத்தில் அன்பையும் பெற்றவர்.

பிக் பாஸ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட ஓவியா, நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

பிக் பாஸ் வீட்டில் தனிமையின் கொடுமையில் சிக்கிய ஓவியாவுக்கு வெளியே ஓவிய ஆர்மியை உருவாக்கி ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில், போட்டியாளர்கள் போலியாக இருப்பதாகவும், முதல் சீசனை போல் இந்த சீசன் இல்லை என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சீசனிலும் ஒரு ஓவியாவை எதிர்ப்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே எஞ்சியுள்ளது

இதனிடையே, ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய ஓவியாவிடம், பிக் பாஸ் 2 உங்களது இடத்தை யாரும் நிரப்பவில்லை.

மும்தாஜ் நேர்மையாக இருக்கிறார். இருந்தாலும் நீங்க தான் லெஜெண்ட் என கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ஓவியா, நான் பிக் பாஸ் பார்ப்பதே இல்லை.

அனைவரும் நல்லவர்கள் தான் என கூறி ஷாக் கொடுத்தார்.

மேலும், ஒரு ரசிகர், உங்களை பிக் பாஸ் 2 வீட்டில் மிஸ் செய்வதாகவும், உங்கள அடிச்சிக்க ஆளே இல்லை என்றும் கூறியதற்கு, ஒவ்வொருவருக்கும் தனித்துவம் உண்டு.

யாரையும் ஒப்பிட வேண்டாமே ஹனி என ஓவியா பதிலளித்துள்ளார்.

About அருள்

Check Also

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம்

இங்கிலாந்தில் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு உற்சாக நடனம் பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் …