உலக செய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: வாகா எல்லையை மூடும் பாகிஸ்தான்!

இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீரில் இந்திய அரசு எடுத்த ஒரு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் இவ்வளவு ஆவேசமாக செயல்படுவது ஏன்? என்பதே உலக நாடுகளின் கேள்வியாக உள்ளது.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கும், காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கும் கிட்டத்தட்ட திமுக அளவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றது பாகிஸ்தான்.

ஏற்கனவே தூதகரை திரும்ப அழைப்போம், தூதரகத்தை மூடுவோம் என்று சொன்ன பாகிஸ்தான், தற்போது வாகா எல்லையை மூடவும் முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளது
காஷ்மீர் குறித்து இந்தியா பிறப்பித்த சட்டங்கள் உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும் என்றும், இல்லையெனில் இந்தியா கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறிய பாகிஸ்தான், காஷ்மீர் எல்லையை மூடுவதாக அதாவது வாகாவில் இருக்கும் எல்லையை மொத்தமாக மூடுவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இந்த எல்லையை மூடியால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பஸ் போக்குவரத்து உட்பட எந்த விதமான போக்குவரத்தும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் பாகிஸ்தான் இந்த மிரட்டலை இந்தியா கண்டுகொண்டதாக தெரியவில்லை.

போக்குவரத்தை தடை செய்வதாலும், தூதரகத்தை மூடுவதாலும், வாகா எல்லையை மூடுவதாலும் இந்தியாவிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது

Tags
Show More

Related Articles

Back to top button
Close