இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் சதி!

வங்க தேசத்தில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி!

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் அனைத்து சதிதிட்டங்களையும் தீட்டி வருகிறது. காஷ்மீர் வழியாக பயங்கரவாதிகளை தொடர்ச்சியாக அனுப்பி வந்தது.

தற்போது, மேற்கு எல்லையில் இந்திய ராணுவம் பாதுகாப்பை அதிகரித்ததும், வங்காளதேசத்தில் அதனுடைய வேலையை தொடங்கியிருப்பது, தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த வங்காளதேசத்தில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்புக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவி அளித்து வருகிறது.

வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் இருக்கும் 40 ரோஹிங்கியாக்களை இதற்கான பணிக்கு எடுத்துள்ளது. பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ முதல் தவணையாக ரூ. 1 கோடியை வங்காளதேச பயங்கரவாத அமைப்புக்கு வழங்கியுள்ளது என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பான தகவல்கள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.), எல்லை பாதுகாப்பு படை மற்றும் ரா உளவுப்பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய பாதுகாப்பு முகமைகள் வங்காளதேச பயங்கரவாதிகள் மற்றும் ரோஹிங்கியாக்களின் நகர்வுகளை உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

மேற்கு வங்காளத்தில் கடந்த மாதம் 22 வயது பயங்கரவாதி முசாரப் ஹூசைன் கைது செய்யப்பட்டான். பயங்கரவாதி ஜமாத்-உல்-முஜாஹிதீன் பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்தவன். பெங்களூருவில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு முசாரப் ஹூசைனை கைது செய்து விசாரித்தது.

தர்பார் படக்குழுவை எச்சரித்த சசிகலா தரப்பு

இன்றைய ராசிப்பலன் 10 சனவரி 2020 வெள்ளிக்கிழமை – Today rasi palan 10.01.2020 Friday

Tags
Show More

Related Articles

Back to top button
Close