Breaking News
Home / இலங்கை செய்திகள் / கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்த பாலித எம்.பி.!

கிளிநொச்சியில் கிணறுகளை துப்பரவு செய்த பாலித எம்.பி.!

கிளிநொச்சி மாவட்டத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் விஜயம் செய்த வாழ்வாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும தலைமையிலான குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 21ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தால் மூடப்பட்டுக் காணப்படுகின்றன.

இதனால் சுத்தமான நீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர்.

இந்தநிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளைத் துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் நேற்று பரந்தன் பகுதியில் உள்ள கிணறுகளை மாலை வரை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.

Check Also

வலி. வடக்கில் கடற்படைக்கு இன்று காணி அளவீடு! – இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு

வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமுக்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை நில அளவீட்டுத் திணைக்களத்தால் …