சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

பரவை முனியம்மா உடல்நிலை: அப்டேட் தந்த நடிகர் அபிசரவணன்

விக்ரம் நடித்த ‘தூள்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அறிமுகமாகி அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இடம்பெற்ற ‘சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி…’

என்ற பாடல் மூலம் தமிழக சினிமா ரசிகர்கள் இடையே பிரபலமானவர் பரவை முனியம்மா.

இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து பரவை முனியம்மாவுக்கு கோலிவுட் திரையுலகில் வாய்ப்புகள் குவிந்தது. இதனையடுத்து அவர் சுமார் 80 படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் பரவை முனியம்மாவின் உடல்நிலை மோசமானதை அடுத்து அவர் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் அவரது சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்டதால் பொருளாதார ரீதியில் அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.

இதனையறிந்த அபி சரவணன் என்ற நடிகர் பரவை முனியம்மாவின் நிலை குறித்து வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷிடம் கூற, உடனே அவர் பரவை முனியம்மாவின் மருத்துவ செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறினார். மேலும் நடிகர் சங்கமும் நிதியுதவி செய்தது.

அதுமட்டுமின்றி வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகம் பரவை முனியம்மாவிற்கு இலவச சிகிச்சை தர ஒப்புக்கொண்டது
இந்த நிலையில் பரவை முனியம்மாவில் உடல்நிலை குறித்து நடிகர் அபி சரவணன் கூறியபோது, ‘பரவை முனியம்மா பாட்டி நலமுடன் வீடு திரும்பினார்.

இலவச மருத்துவம் பார்த்த வேலம்மாள் மருத்துவ நிர்வாகத்திற்கும், அதற்காக மருத்துவமனையை தொடர்ப்பு கொண்டு உதவிய ஜசரி கணேஷ் மற்றும் நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும்

அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். தற்போது பரவை முனியம்மா தனது குடும்பத்தினர்களுடன் மகிழ்ச்சியாக உள்ளார்.

இதையும் பாருங்க :

சசிகலா குடும்பத்தினரின் ரூ. 1,600 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்

மீரா மிதுன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

மலர்ந்த மலர்கள்

மூன்று வேளை சோற்றுக்காக வெடிகுண்டு மிரட்டல்: கைதானவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

செயலிழந்த உடல் உறுப்புகள். மரணப்படுக்கையில் பறவை முனியம்மா

Tags
Show More

Related Articles

Back to top button
Close