பரிசில் திடீரென குவிந்த மக்கள்!

பரிசில் திடீரென குவிந்த மக்கள்!

பரிசில் நேற்றைய தினம் பொது வெளி ஒன்றில் பொதுமக்கள் திடீரென குவிந்ததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

பரிஸ் 7 ஆம் வட்டாரத்தில் உள்ள Esplanade des Invalides முன்றலில் உள்ள பாரியளவிலான புல்வெளி பிராந்தியத்தில் கட்டுப்படுத்தமுடியாத அளவு மக்கள் குவிந்தனர்.

வெயில் காரணமாக ஓய்வெடுப்பதற்காக அவர்கள் அங்கு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களில் பலர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை.

தவிர சமூக இடைவெளியையும் பேணவில்லை. அதிகளவான மக்கள் இருந்ததால் நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் குவிந்தனர்.

பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும் படி காவல்துறையினர் பணித்தனர். ஒலிபெருக்கி மூலம் இவ்வறிவித்தலை அவர்கள் வெளியிட்டனர்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்படும் எனவும், புல்வெளியில் அமர்ந்து மது உட்கொள்பவர்களுக்கும் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரித்தனர்.

அதன் பின்னர் மக்கள் மெல்ல மெல்ல அங்கிருந்து வெளியேற ஆரம்பித்ததை காணக்கூடியதாக இருந்தது.

இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரிப்பு

Check Also

ரஷியாவில் ஒரே நாளில் 8600 பேருக்கு கொரோனா

ரஷியாவில் ஒரே நாளில் 8600 பேருக்கு கொரோனா

ரஷியாவில் ஒரே நாளில் 8600 பேருக்கு கொரோனா ரஷியாவில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) …