Breaking News

நாடாளுமன்ற விதிமுறையை மீறியே சம்பிக்க கைது!

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

நாடாளுமன்ற விதிமுறைகளை மீறியே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், எனவே இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இராஜகிரியவில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து ஒன்று தொடர்பாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை அவரது வீட்டுக்குச் சென்ற கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர்,  கைதுசெய்ய வந்திருப்பதாகக் கூறியிருந்தனர்.

அப்போது, கைதுசெய்வதற்கான நீதிவானின் உத்தரவு உள்ளதா? நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைதுசெய்வதற்கு முன்னர் சபாநாயகரிடம் பெறப்படும் அனுமதி உள்ளதா? என்று சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பினார்.

எனினும், குற்றத் தடுப்புப் பிரிவினர் எந்த அனுமதிகளையும் பெற்றிருக்கவில்லை. இதையடுத்து, சம்பிக்க ரணவக்கவின் இல்லத்தில் இருந்தே குற்றத் தடுப்புப் பிரிவினர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியுடன் தொலைபேசியில் பேசினர். சபாநாயகர் கரு ஜயசூரிய வெளிநாடு சென்றதனாலேயே பிரதி சபாநாயகருடன் அவர்கள் தொலைபேசியில் பேசினர்.

இதன்போது முறையற்ற விதத்தில் கைதுசெய்யப்படுவதற்குச் சம்பிக்க ரணவக்க கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

எனினும், குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.

இந்தக் கைது தொடர்பில் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கருத்துத் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் கைதுசெய்ய முன்னரே எழுத்து மூலம் தகவல் கொடுக்க வேண்டும். ஆனால், சம்பிக்க ரணவக்கவைக் கைதுசெய்யும் போது அவ்வாறு எந்தவிதமான அறிவித்தல்களும் வழங்கப்படவில்லை.
 
கைது செய்வதற்குச் சென்றவர்கள் தொலைபேசி மூலமாக மட்டும் எமக்குத் தகவல்கள் வழங்கினர்.

நாடாளுமன்ற விதிமுறைகளை மீறி இடம்பெற்ற இந்தக் கைதுக்கு எதிராக சபாநாயகர் அலுவலகம் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகின்றது” – என்றார். 

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …