தமிழ் கவிதைகள்முக்கிய செய்திகள்

மக்கள் கூட்டணி

மக்கள் கூட்டணி

மக்கள் கூட்டணி
மலரட்டும் ஈழர்கள் வாழ்வெனி
திக்கெட்டும் வேர்பரப்பும்
திறன் மிக்க செயலணி.
மக்கள் கூட்டணி – இது தமிழ்தேசிய
மக்கள் கூட்டணி.

(மக்கள் கூட்டணி)

உரிமைகள் மீட்க ஆணி சேர்வோம்
தமிழர்கள் வறுமை போக்க அணி சேர்வோம்
இழி நிலமை மாற்றும் அணி சேர்வோம்
இணைவோம் தமிழர்கள்
அணி சேர்வோம்.
கடந்ததை மறப்போம் இழந்ததை மீட்போம்
காலத்தை உணர்ந்து
கைகோர்ப்போம்.

(மக்கள் கூட்டணி)

கட்சிகள் அனைத்தும்
ஒன்றாக மக்கள்
கருத்தில் நிற்போம்
நன்றாக
நடைமுறை அரசியல் பலமாக
நாம் இணைவோம் இன்று வளமாக.
கடந்ததை மறப்போம் இழந்ததை மீட்போம்
காலத்தை உணர்ந்து
கை கோர்ப்போம்.

(மக்கள் கூட்டணி)

ஒன்றாய் நின்றால் பலமுண்டு
துண்டு இரண்டாம் வந்தால் அழிவுண்டு
கண்டோம் இதை நாம்
விழி கொண்டு
கருத்தில் கொள்வோம்
தெளிவுடன்டு.
கடந்ததை மறப்போம் இழந்ததை மீட்போம்
காலத்தை உணர்ந்து
கை கோர்ப்போம்.

(மக்கள் கூட்டணி)

ஈழக்கவிஞன்.
புதுவை தாசன்.
( முல்லைமதி)

விஜய் எங்களுக்கு ஒரு ஆளே இல்லை

விஜய்க்கு வருமான வரித்துறை சம்மன்: 3 நாட்களுக்குள் ஆஜராக உத்தரவு

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close