தமிழ்நாடு செய்திகள்முக்கிய செய்திகள்

பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு ஏற்கனவே ஒரு மாதம் பரோல் வழங்கிய நிலையில் தற்போது மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

தனது உடல்நிலை மற்றும் தனது தந்தையின் உடல் நிலையை காரணம் காட்டி தனக்கு ஒரு மாதம் பரோல் வழங்குமாறு சிறைத்துறை அதிகாரிகளிடம் பேரறிவாளன் விண்ணப்பித்திருந்த நிலையில் அந்த விண்ணப்பத்தை ஆய்வு செய்த சிறைத்துறை அதிகாரிகள் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர்

இதனையடுத்து அவர் சிறைத்துறை நடவடிக்கைகள் முடிந்து வரும் திங்கட்கிழமை பரோலில் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பரோலில் செல்லும் பேரறிவாளன் சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டுமென்றும் அவ்வாறு விதிகளை மீறி எந்த நடவடிக்கைகளிலும் வரக்கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிபந்தனையை ஏற்று பேரறிவாளன் பரோலில் வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் பாருங்க :

சர்வதேச எழுச்சி நட்சத்திரம்! அமெரிக்காவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு காத்திருக்கும் விருது

விரைவில் தொடங்குகிறது சிம்புவின் மாநாடு – தயாரிப்பாளர் அறிவிப்பு!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!

வள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது!

Tags
Show More

Related Articles

Back to top button
Close