Breaking News

குவைத்தில் வரும் புதன்கிழமை முதல் ஒரு சில மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி

குவைத்தில் வரும் புதன்கிழமை முதல் ஒரு சில மசூதிகளில் தொழுகை நடத்த அனுமதி

குவைத் அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகம் அறிவிப்பு…

கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக குவைத்தில் கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டு இருந்த மசூதிகளை வரும் புதன்கிழமை (10/06/2020) முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார துறை அமைச்சர் டாக்டர் பஹத் அல்-அஃபாசி அவர்கள் அறிவிப்பு..

வரும் புதன்கிழமை லுகர் தொழுகை முதல் தினசரி ஐந்து வேலை தொழுகைகள் தொடங்கப்படும் என்றும்,

முன்னோட்டமாக பொதுமக்கள் குறைவாக இருக்கும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள மசூதிகளில் மட்டுமே தொழுகை மேற்க்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகை குவைத் நகரில் உள்ள பெரிய (கிராண்ட்) மசூதியில் மட்டுமே நிகழ்த்தப்படும். இந்த தொழுகை குவைத் அரசின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியில் (Kuwait TV) ஒளிபரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூம்மா தொழுகை நடைபெறும் பெரிய மசூதி தொழுகையில் கலந்து கொள்ள மசூதியின் இமாம் மற்றும் ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் கூறினார்..

பாங்கு சொல்லியதில் இருந்து 5 நிமிடங்களில் லுகர், அஸர், மஹ்ரிப், இசா, தொழுகை நடைபெறும். பஜர் தொழுகை 10 நிமிடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About அருள்

Check Also

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பனிப்பொழிவு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் அதில் உற்சாகமாக விளையாடி …