Breaking News
மகிந்த தேசப்ரிய
மகிந்த தேசப்ரிய

சுவரொட்டிகளை காட்சிப்படுத்த கூடிய இடங்கள்.

சுவரொட்டிகளை காட்சிப்படுத்த கூடிய இடங்கள்.

தேர்தல் பிரசார அலுவலகம் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படும் இடங்களில் மாத்திரமே வேட்பாளர்கள் தங்களது சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற தெளிவுப்படுத்தல் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுவரொட்டிகள், பதாதைகள், புகைப்படங்கள் என்பவற்றை காட்சிப்படுத்த 1981 இலக்கம் 1 நாடாளுமன்ற சட்டத்திட்டங்களுக்கு அமைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், தேர்தல் பிரசார அலுவலகங்களில் கட்சியின் பெயர், சின்னம், என்பவற்றை காட்சிப்படுத்த முடியும்.

அத்துடன் தேர்தல் பிரசாரக் கூட்டம் இடம்பெறும் பகுதியில் மாத்திரம் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மகிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 ஆயிரம் ரூபாய்-சஜித் பிரேமதாச

About அருள்

Check Also

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ?

கட்டாய ராணுவ பயிற்சி அளிக்க இலங்கை அரசு திட்டம் ? இலங்கையில் 18 வயதை நிறைவு செய்யும் அனைவருக்கும் கட்டாய …