மோடி

அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் உடன் இணைந்து உரையாற்றும் பிரதமர் மோடி!

அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து இந்தியர்கள் மத்தியில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி 7 நாட்கள் பயணமாக வரும் 21-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். நியூயார்க்கில் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர், செப்டம்பர் 22ல் ஹூஸ்டன் நகரில் ஹலோ மோடி என பொருள்படும் ஹவ்டி மோடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்திய அமெரிக்க மக்கள் இடையே உறவை பலப்படுத்த இந்த நிகழ்ச்சி முக்கிய பாலமாக அமையும் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கவும் இந்த சந்திப்பு உதவும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மத்தியில் அந்நாட்டு அதிபர் ஒருவர் உரையாற்றப் போவது இதுவே முதல் முறையாகும்.

அண்மையில் இரு பெரும் நாடுகளின் தலைவர்கள் யாரும், ஒன்று சேர்ந்து பிரமாண்ட கூட்டங்களில் உரையாற்றியது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன் உயிரிழப்பு

ஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன் உயிரிழப்பு

ஆறுமுகன் தொண்டமான் சற்றுமுன் உயிரிழப்பு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தனது 55 ஆவது வயதில் …