Breaking News
இந்திய

இந்திய நிதியுதவியில் இலங்கை தமிழர்களுக்கு 400 வீடுகளை பிரதமர் மோடி அர்ப்பணித்தார்

இந்திய நிதியுதவியுடன் இலங்கை தமிழர்களுக்கு முதல் கட்டமாக கட்டப்பட்ட 400 வீடுகளை பிரதமர் மோடி இன்று அர்ப்பணித்தார்.

இலங்கை தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கும் வீட்டு மனைகள் திட்டம், இந்தியா செய்துவரும் மிக பெரிய திட்டமாக கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கம் ஒட்டு மொத்தமாக 60,000 வீடுகளை இலங்கைக்கு கட்டிக்கொடுக்கிறது.

இதில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றன. மீதமுள்ள 14,000 வீடு மனைகளை கட்டிக் கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் முழு கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கையில் நடைபெற்ற இறுதி போருக்கு பின்னர், இலங்கை தமிழர்களுக்கு 50,000 வீடுகளை கட்டி தர அப்போதைய மன்மோகன் சிங் அரசு முன்வந்தது.

இதையடுத்து, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதுவரை 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன. தொடர்ந்து, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு இத்திட்டத்தை செயல்படுத்தி வந்தது.

இந்த சூழலில், கடந்த 2017-ஆம் ஆண்டு இலங்கை சென்ற பிரதமர் மோடி, மலையகத் தமிழர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மலையகத் தமிழர்களுக்காக இந்திய அரசு தரப்பில் 4,000 வீடுகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அவர்களுக்காக மேலும் 10,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். மலையக மக்களின் கல்வி, சமூக, பொருளாதார வளர்ச்சிக்காக இலங்கை அரசு முன்னெடுக்கும் திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.

இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ள 1990 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இலங்கை முழுவதும் விரிவுபடுத்தப்படும். கொழும்பு- வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்றார்.

இலங்கையில் நுவரெலிய, டன்சினேன் தோட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லியில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அப்போது, முதல்கட்டமாக அப்பகுதிகளில் கட்டப்பட்ட 400 வீடுகளை தேயிலை தோட்ட தொழிலாளர்களான தமிழர்களுக்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.

இதனிடையே, பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியான மேலும் 10,000 வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் திட்டத்திற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது

Jai Veera Hanuman 06-08-2018 Jaya Tv Serial Online

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …