Tuesday , December 11 2018
Home / Headlines News / கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி
கலைஞருக்கு இறுதி அஞ்சலி

கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மோடி இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அதன்பிறகு ராஜாஜி ஹாலுக்கு வந்த மோடி திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தி மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கலைஞரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Check Also

2.0

சினிமா அசுர வசூல் வேட்டையில் ‘2.0’:ரூ.600 கோடி வசூல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூலித்து அசுர சாதனை படைத்துள்ளது. லைகா …