இந்தியா செய்திகள்முக்கிய செய்திகள்

நிதி அமைச்சர் பதவிக்கு வேறு ஆளா?

சு.சுவாமி போட்ட ஒரே போடு

நிதி அமைச்சராக உள்ள நிர்மலா சீதாரமனை விமர்சித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி.

சமீபத்தில் சென்னையில் பிரபல ஆங்கில பத்திரிக்கை நடத்திய நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்டார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. இந்த நிகழ்வின் போது சுப்பிரமணியன் சுவாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. அவர் கூறியதாவது,

பொருளாதாரம் என்பது ஒரு பெரிய விஷயம். ஒரு துறை பலனடைந்தால் இன்னொரு துறை பாதிப்படையும், எனவே அதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஜேஎன்யூவுக்கு போய் படித்துப் பட்டம் வாங்கி விட்டால் எல்லாவற்றையும் கற்று விட்டதாக அர்த்தம் கிடையாது.

நமக்கு இதுவரை ஒரு நல்ல நிதியமைச்சர் கூட கிடைத்ததில்லை. மோடிக்கு பொருளாதாரம் தெரியவில்லை. எனவே என்னை வேண்டுமானால் முயற்சித்துப் பார்க்கட்டும் என நீதி அமைச்சர் பதவிக்கு அடிப்போட்டார்.

இதற்கு முன்னரும், பாஜக அரசில் இதுவரை பொருளாதார மேதைகள் நிதியமைச்சராக இருந்தது இல்லை. அருண் ஜெட்லி மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

”சசிகலா குறித்த வசனத்தை நீக்க தயார்”; லைகா

உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது

Tags
Show More

Related Articles

Back to top button
Close