Breaking News
சந்தேக கேஸில் காவல்துறை விசாரிப்பு

சந்தேக கேஸில் காவல்துறை விசாரிப்பு; பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார் குளத்தில் அரசு மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 16 வயது மதிப்பிருக்கும் 4 மாணவர்களின் செயல்பாடுகள், கஞ்சா போன்ற போதை வஸ்துக்களை விற்பது போல் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சக மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மாணவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் கஞ்சா இல்லை எனவும் சக மாணவர்களும், மக்களும் தவறான தகவல்கள் அளித்ததாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களை காவல்துறையினர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், காவல்நிலையத்திற்கு சென்று வந்த 4 மாணவர்களில் ஒருவர் தீவிர மன உளைச்சலில் இருந்திருக்கிறார். எனவே இதனை தாங்க முடியாத அந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது உடலை வாங்குவதற்கு மாணவரின் உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …