Breaking News

திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் ஆரம்பம்!

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்ட சம்பவம், புதிய அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்தக் கைது குறித்து சமூக கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன போன்றவர்கள், ராஜபக்ச அரசு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்து விட்டது எனத் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதியானாலும் சிறுத்தை தனது புள்ளிகளை மாற்றிக்கொள்ள முடியாது என்பதை இந்தளவு விரைவாக கோட்டாபய ராஜபக்ச நிரூபிப்பார் என்று நினைத்துப் பார்க்கவில்லை என்று ‘ருவிட்டர்’ பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர, ‘அனுதாபம் – சட்டத்தின் ஆட்சியின் மறுபிறப்பு 2015 ஜனவரி 08, மூச்சுத் திறண வைத்துக் கொலை, 2019 டிசம்பர் 18′ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சியாளரின் பழிவாங்கும் அரசியல் அதன் பாணியில் தொடங்கியது என்று ஹர்ஷ டி சில்வா பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அதேவேளை, ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ‘ருவிட்டர்’ பதிவு ஒன்றில், சிங்கப்பூரின் மோசமான வகையிலான ஒரு பொலிஸ் அரசை நோக்கிய முதல் படியை இலங்கை எடுத்துள்ளது எனவும், வரவிருக்கும் நாட்களில் குறைந்தபட்சம் ஒரு முன்னாள் அமைச்சராவது கைதுசெய்யப்படுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

About விடுதலை

Check Also

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்றும் இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை …