Breaking News
பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த புயல்

தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் உலகின் மிகவும் பேரழிவுக்குள்ளான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 20 சக்தி வாய்ந்த புயல்கள் பிலிப்பைன்சை தாக்குகின்றன.

இதுதவிர நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்களும் அந்த நாட்டை உலுக்குகின்றன.

வாம்கோ என பெயரிடப்பட்ட இந்த சக்தி வாய்ந்த புயல் பிலிப்பைன்சின் தலைநகர் மணிலாவை புரட்டிப்போட்டுள்ளது.

மேலும் மணிலாவில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புலாக்கன் மற்றும் பம்பங்கா ஆகிய மாகாணங்களிலும் இந்த புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மணிக்கு 130 கி.மீ.

வேகத்தில் தொடங்கி 235 கி.மீ. வேகம் வரை சூறாவளி காற்று சுழன்றடித்தது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சரிந்தன. வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன.

புயலைத் தொடர்ந்து பேய் மழை கொட்டித்தீர்த்தது. இதனால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனிடையே புயல் காரணமாக மின்வினியோகம் தடைபட்டு, சுமார் 30 லட்சம் குடும்பங்கள் இருளில் தவித்து வருகின்றன.

இந்த நிலையில் புயல் மற்றும் மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 39 பேர் உயிரிழந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 32 பேர் மாயமாகியுள்ளனர்.

அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பு மருந்து ஏப்ரலில் அமெரிக்கர்கள் அனைவருக்கும் கிடைக்கும்: அதிபர் டிரம்ப்

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …