தமிழீழ செய்திகள்முக்கிய செய்திகள்

மீண்டும் வந்த ‘பிரபாகரன்’..! அதிர்ந்து போன ட்விட்டர் நிர்வாகம்..!

இலங்கையில் இருந்து ஈழத்தை பிரித்து தனிநாடு அமைப்பதற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக அதன் தலைவர் பிரபாகரன் தலைமையில் போராடி வந்தனர்.

இறுதியாக 2009 ம் ஆண்டு நடைபெற்ற நான்காம் கட்ட போரில் புலிகள் முற்றிலும் அளிக்கப்பட்டு விட்டதாகவும் அதன் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றும் இலங்கை ராணுவம் அறிவித்தது.

எனினும் உலககெங்கும் வாழும் தமிழர்களில் பெரும்பாலானோர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் நிச்சயம் அவர் திரும்பி வருவார் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 65 வது பிறந்தநாள் கடந்த 26 ம் தேதி தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு சமூக ஊடகமான ட்விட்டரில் #HBDTamilTiger, #PrabbhakaranIsOurLeader என்கிற ஹாஸ்டேக்கள் ட்ரெண்ட் ஆகி இருந்தன.

ஆனால் ஒவ்வொரு ஹாஸ்டேக்கும் ட்ரெண்ட் ஆக ஆக ட்விட்டர் நிர்வாகம் அதை நீக்கி வந்தது. இதனிடையே அதற்கு பதிலடியாக இன்று மீண்டும் #PrabhakaranIsOurHero என்கிற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்ய பிரபாகரனின் ஆதரவாளர்கள் முடிவெடுத்தனர்.

அதன்படி பிரபாகரனின் புகைப்படங்களுடன் அவரைப்பற்றிய செய்திகளை ஹாஸ்டேக்குடன் காலையில் இருந்து பரப்பி வந்தனர். இந்திய அளவில் அது முதலிடத்தில் சிலமணி நேரங்களாக இருந்தது.

பின்னர் தற்போது மீண்டும் அட்னஹ் ஹாஸ்டேக்கை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது. இருப்பினும் தொடர்ந்து பிரபாகரனை பற்றியும் புலிகள் இயக்கம் குறித்தும் அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் பாருங்க :

இலங்கை

தமிழகம்

இன்றைய ராசிபலன்

உலக செய்திகள்

https://youtu.be/jvqRLMYl_P4

Tags
Show More

Related Articles

Back to top button
Close