Breaking News
சிறந்த தலைவரான

சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம்

சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம் என்று கோபாலபுரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பேட்டி அளித்துள்ளார்.

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி கடந்த மாதம் 7-ம் தேதி காலமானார்.

அதைத் தொடர்ந்து காலியாக உள்ள திமுக தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது.

மேலும், துரைமுருகன் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வருகை புரிந்தார்.

அவரை மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பிரணாப் முகர்ஜி பேசுகையில், “கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு மு.க.ஸ்டாலின், கனிமொழியிடம் விசாரித்தேன்.

சிறந்த தலைவரான கருணாநிதியை இழந்து விட்டோம். திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தேன்” என்று கூறினார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …