Breaking News
வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்..

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்..

வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள்..

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை இன்று வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான புதிய திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இதன்படி, நாளை அல்லது எதிர்வரும் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் ஏதேனும் ஒரு தினத்தில் தேர்தல் இடம்பெறவுள்ள புதிய திகதி அடங்கிய வர்த்தமானியை வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி இன்றைய தினம் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த வேட்பாளர்களின் விருப்பு இலக்கங்களை அந்த அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்றைய தினத்திற்குள் இரண்டு மாவட்டங்களுக்கான வாக்குசீட்டுக்களை அச்சிடும் பணிகளை நிறைவு செய்யவுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

தற்போது 7 மாவட்டங்களுக்கான வாக்கு சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக ஒரு கோடியே 70 இலட்சம் வாக்குசீட்டுகள் அச்சிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை முக்கிய செய்திகள் 09/06/2020

About அருள்

Check Also

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம்

அனைத்துப் பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பம் மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் …