Breaking News
குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர் இன்று தமிழகம் வருகிறார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று தமிழகம் வருகிறார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டாலும் மருத்துவர்களி தீவிர சிகிச்சை அதனை சீராக்கியது.

அதேசமயம். சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியை, மாநில, தேசிய அரசியல் கட்சித் தலைவர்கள், அண்டை மாநில முதல்வர்கள், திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.

அந்த வகையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வர இருக்கிறார். முன்னதாக, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …