Breaking News

போருக்கு தயாராகுமாறு சீன வீரர்களை அதிபர் சி ஜின்பிங் அழைப்பு

போருக்கு தயாராகுமாறு சீன வீரர்களை அதிபர் சி ஜின்பிங் அழைப்பு

போருக்கு தயாராக இருக்குமாறு சீன படை வீரர்களை அந்நாட்டு அதிபர் சி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

குவான்டாங்கிலுள்ள ராணுவ தளத்தைப் பார்வையிட்ட ஜின்பிங், ராணுவ வீரர்களிடையே பேசிய போது இதனை தெரிவித்ததாக சீன ஊடக தகவலை சுட்டிக்காட்டி ஆங்கில தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருமித்த மனம் மற்றும் சக்தியுடன் போருக்கு தயாராகுமாறும், உச்சபட்ட உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் ராணுவ வீரர்களை கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

நாட்டிற்காக முழு விசுவாசத்துடன் இருக்குமாறு அவர் வீரர்களை அறிவுறுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.

எனினும், இந்தியா அல்லது அமெரிக்கா போன்ற மற்ற நாடுகளை குறிப்பிட்டு அவர் பேசினாரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

லடாக் எல்லைப் பிரச்சனையில் சீன ராணுவத்துடன் தீர்வு எட்டப்படாமல் உள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

பிரான்சில் கொரோனா இரண்டாவது அலை – மீண்டும் ஊரடங்கு

About அருள்

Check Also

60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது - உலக சுகாதார நிறுவனம் தகவல்

60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல்

60 நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – உலக சுகாதார நிறுவனம் தகவல் உலகின் 60 நாடுகளில் உருமாறிய …