Breaking News
ஜனாதிபதி ஆணைக்குழுவில் திலின கமகே முன்னிலை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் திலின கமகே முன்னிலை

ஜனாதிபதி ஆணைக்குழுவில் திலின கமகே முன்னிலை

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னாள் நீதவான் திலின கமகே முன்னிலையானார்.

சட்டவிரோதமாக யானை குட்டி ஒன்றை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் பதவி விலக்கப்பட்டமைக்கு எதிராக குறித்த ஆணைக்குழுவில் அவர் முறைப்பாடு செய்திருந்தார்;.

இந்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்றைய தினம் அந்த ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் நாளைய தினம் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகரவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களுக்கமைய தாம் பதவி விலக்கப்பட்டுள்ளதாக கூறி சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபராக செயற்பட்ட லலித் ஜயசிங்க முன்வைத்த முறைப்பாட்டுக்கமைய ஷானி அபேசேகரவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பித்தம் தொடர்பான நோய்களை நீக்கும் அகத்தி கீரை…!!

About அருள்

Check Also

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு!

வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழப்பு! கடந்த 24 மணித்தியாலங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 12 பேர் உயிாிழந்துள்ளதுடன் 40 …