தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38 ஆயிரத்தை தாண்டியது

கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையிலும் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 37,736 ரூபாயாக இருந்தது.

இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 544 ரூபாய் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.38,280-க்கு விற்பனையாகிறது.

இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.68 உயர்ந்து, ரூ.4785 க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 40,152 ரூபாயாக உள்ளது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று 60,100 ரூபாயாக இருந்த நிலையில் இன்று 65,700 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் இறப்பு சதவீதம் குறைந்து உள்ளது

About அருள்

Check Also

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 114 உயிரிழப்பு தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 114 பேர் …