Breaking News
Home / இந்தியா செய்திகள் / “யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..“ ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி – வீடியோ
யாதும் ஊரே

“யாதும் ஊரே.. யாவரும் கேளிர்..“ ஐ.நா-வில் தமிழில் முழங்கிய பிரதமர் மோடி – வீடியோ

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

ஐநா சபைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனாரின் பாடலை குறிப்பிட்டு பேசினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் உலக நாடுகளின் தலைவர்ள் முன்னிலையில் பேசிய பிரதமர் மோடி, 130 கோடி மக்களின் பிரதிநிதியாக இங்கு பேசுவதில் மகிழ்ச்சி என பெருமி்தத்துடன் கூறினார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளில் 11 கோடி கழிப்பறைகளை கட்டி உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்வதாக கூறிய மோடி, 2025-ம் ஆண்டுக்குள் காச நோய் இல்லாத நாடாக இந்தியா மாறும் என்றும் 2021-க்குள் 2 கோடி வீடுகள் ஏழைகளுக்கு கட்டித் தரப்படும் என்றும் தெரிவித்தார்.

மோடி தனது உரையின் போது தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்ற பாடல் வரியை குறிப்பிட்டு விளக்கினார். பயங்கரவாதம் என்பது தனியொரு நாட்டின் பிரச்னை அல்ல என்றதுடன் அதை எதிர்க்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

எது சரியோ அதைதான் நீ செஞ்சிருக்க… கவினை பாராட்டிய பிக்பாஸ் 3 போட்டியாளர்!


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!
  • 3
    Shares

Check Also

ஒரே பிரசவத்தில் 5

ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் பெற்ற தாய் !

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Shares ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் வசித்து வரும் ருஷானா என்பவருக்கு இன்று காலையில் பிரசவ …