சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

ஞானவேல்ராஜா புகாருக்கு கமல் விளக்கம்!

கமல்ஹாசன் மீதான ஞானவேல்ராஜாவின் புகாருக்கு ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு கமல்ஹாசன், ஆன் ட்ரியா, பூஜாகுமார் நடிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் வெளியான படம் உத்தம வில்லன். இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்நிலையில் கடந்த வியாழன் அன்று தயாரிப்பாளர் சங்கத்தில் ஞானவேல்ராஜா புகார் அளித்திருந்தார். அதில், கடந்த 2015 – ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் உருவான உத்தமவில்லன் படம் வெளியாவதில் சில சிக்கல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் தம்மை அணுகியதாகவும், தமது தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கூறி, முன்பணமாக 10 கோடி ரூபாயை கேட்டு பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

நான்கு ஆண்டுகள் ஆகியும் இதுவரை தமது படத்தில் நடிக்க அவர் முன்வரவில்லை என்றும், 10 கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தரவில்லை என்றும் ஞானவேல் ராஜா குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் தொடர்பாக விளக்கம் கேட்டு கமல்ஹாசனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஞானவேல்ராஜாவின் இந்தப் புகார் குறித்து விளக்கமளித்துள்ள ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம், 10 கோடி ரூபாய் பணம் வாங்கியதாக கமல்ஹாசன் மீது பரப்பப்படும் குற்றச்சாட்டுகளை ராஜ் கமல் நிறுவனம் முற்றிலும் மறுக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கமல்ஹாசனுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்தார் என்பதே அப்பட்டமான பொய். அவர் கமல்ஹாசனுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என்பதே உண்மை.

தயாரிப்பாளர் ஞானவேல்ராஜவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எந்த ஒப்பந்தமும் இல்லை. கமல்ஹாசனுடைய புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே ஞானவேல்ராஜா புகாரளித்துள்ளார். இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாராக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இறைச்சி கடைக்காரர்களுக்கு பரிசு கொடுத்த விஜய் ரசிகர்கள்

Tags
Show More

Related Articles

Back to top button
Close