Breaking News
சென்னை

சென்னை நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில்; வெளிநாட்டு பெண்கள் மீட்பு

சென்னை நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஆர்.கே சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் பாலியல் தொழில் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் ஹோட்டல் ஊழியர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.

அத்துடன் இரண்டு வெளிநாட்டு பெண்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.

சுற்றுலா விசாவில் பெண்களை வரவழைத்து பாலியல் தொழில் நடத்தியதாக தகவல் தெரிவித்துள்ள போலீசார், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …