Breaking News
நான் முதல் பெண், கடைசி பெண் அல்ல

நான் முதல் பெண், கடைசி பெண் அல்ல

நான் முதல் பெண், கடைசி பெண் அல்ல

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் கமலா ஹாரிஸ் வெள்ளையர் அல்லாத முதல் கருப்பு பெண்ணாகவும் இந்த பதவியை அலங்கரிக்க உள்ளார்.

அவர் கணவர் டவுக்ளஸ் எம்ஹாப் ஒரு துணை அதிபரின் கணவராக மாறப் போகிற முதல் யூதர் ஆவார். இந்த முதல் அடையாளங்கள் அவருடைய அரசியலில் வெறும் குறியீடுகளா அல்லது அவை கடலளவு மாற்றத்தை ஏற்படுத்த உள்ளனவா என்பதை காண அரசியல் ஆய்வாளர்கள் முதல் களச் செயல்பாட்டாளர்கள் வரை பலரும் ஆவலுடன் உள்ளனர்.

ஜனநாயகக் கட்சியின் முதுகெலும்பாக விளங்கும் வாக்காளர்கள் பலரும் கருப்பினத்தவரே. பைடனின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கருப்பின மக்கள் மற்றும் ஆசிய-அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெற கமலா ஹாரிஸ் முக்கியமான சக்தியாக விளங்கினார்.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு தனது ஆதரவாளர்கள் மத்தியில் கமலா ஹாரிஸ் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

ஜனநாயகத்தைக் காப்பாற்றி, வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.

பெருவாரியாக வாக்களித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றிய மக்களுக்கு நன்றி.

நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருக்கும் அளவில்லாத அன்பே எனது வெற்றிக்குக் காரணம்.

ஜனநாயகம் என்பது ஒரு நிலை அல்ல அது ஒரு செயல்.

கணவர் உள்பட குடும்பத்தினர் அனைவரின் அன்புக்கும் நன்றி.

நம்பிக்கையுடன் அமெரிக்காவுக்கு வந்த தனது தாயை இந்த தருணத்தில்நினைவவு கூர்கிறேன்.

கனவுகள் சாத்தியமாவதற்கு எனது வெற்றியே இளம் தலைமுறையினருக்கு உதாரணம்.

யாருக்கு வாக்களித்து இருந்தாலும் அனைத்து அமெரிக்கர்களுக்காகவும் உழைப்பேன்.

துணை அதிபராகத் தேர்வாகியுள்ள முதல் பெண் நான். கடைசிப் பெண் அல்ல. இது துவக்கமே

ஒரு பெண்ணை துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் பைடனுக்கு இருக்கிறது.
இனவெறியை அகற்றுவோம் என உறுதிப்படக் கூறுகிறேன்.

Today rasi palan – 08.11.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (நவம்பர் 08, 2020)

About அருள்

Check Also

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …