Breaking News
கறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை

கறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை

கறுப்பினத்தவரின் மரணத்தையடுத்து பொலிஸ் நிலையம் தீக்கிரை

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கறுப்பின நபர் ஒருவரின் கழுத்தில் மீது வெள்ளையின பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது முழங்காலை வைத்து அழுத்திய நிலையில், அந்நபர் உயிரிழந்ததையடுத்து, அமெரிக்காவின் பல மாநிலங்களில் வன்முறைகள் வெடித்துள்ளன. பொலிஸ் நிலையமொன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

மினசோட்டா (Minnesota) மாநிலத்தில் மினேபொலிஸ் (Minneapolis), நகரில் கடந்த திங்கட்கிழமை, 46 வயதான ஆபிரிக்க அமெரிக்கரான ஜோர்ஜ் ப்ளோய்ட்( George Floyd ) என்பவர் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவர் நிலத்தில் கிடத்தப்பட்ட நிலையில் அவரின் கழுத்தில் மீது வெள்ளையின பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பல நிமிடங்கள் காலை அழுத்தி வைத்திருந்த பின், ஜோர்ஜ் ப்ளோய்ட் உயிரிழந்தார்.

ப்ளோய்ட்டின் கழுத்தில் வெள்ளையின பொலிஸ் உத்தியோகத்தர் காலை வைத்து அழுத்தும் காட்சி அடங்கிய வீடியோவும் வெளியாகியது.

தன்னால் சுவாசிக்க முடியாமல் இருப்பதாக ஜோர்ஜ் ப்ளோய்ட் கூறுவதும் அவ்வீடியோவில் பதிவாகியுள்ளது. ஜோர்ஜ் ப்ளோய்ட் மரணத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மினேபொலிஸ் நகரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

புதன்கிழமை இரவு ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர். இதன்போது பொலிஸார் மீது கல்வீச்சும் நடத்தப்பட்டது. பொலிஸார் வீசிய கண்ணீர்ப்புகைக் குண்டுகளை பொலிஸார் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி வீசினர்.

வியாழன் இரவு, 3rd Precinct எனும் குறித்த பிரதேச பொலிஸ் நிலையத்துக்குள் நுழைய முயன்ற மக்களை கலைப்பதற்காக பொலிஸார் இறப்பர் தோட்டாக்களையும் கண்ணீர் புகைiயும் பயன்படுத்தினர். எனினும், பொலிஸாரின் தடையையும் மீறி ஆர்ப்பாட்டக்கார்கள் உள்ளே புகுந்தனர்.

அங்கிருந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனைவரும் வெளியேறியிருந்த நிலையில், அந்த பொலிஸ் நிலையம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

அருகிலுள்ள சில வர்த்தக நிலையங்களுக்கும் தீக்கிரையாக்கப்பட்டது. பல கடைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் சூறையாடப்பட்டுள்ளன.ஜோர்ஜ் ப்ளோய்ட் மரணம் தொடர்பில் மினேபொலிஸ் நகர பொலிஸ் தலைவர் மெடாரியா அரடோன்டோ மன்னிப்புக் கோரியுள்ளார்.

ஜோர்ஜ் புளோய்ட்டின் மீது காலை வைத்து அழுத்திய பொலிஸ் உத்தியோகத்தரம் ஏனைய 3 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோர்ஜ் புளோய்ட்டின் மரணத்தினால் ஜனாதிபதி ட்ரம்ப் வெகுவாக கவலையடைந்துள்ளார் என அவரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

வன்முறைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்ப், ஜோர்ஜ் ப்ளோய்ட்டின் நினைவை வன்முறையாளர்கள் அகௌரவப்படுத்துகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜோர்ஜ் ப்ளோய்ட்டின் மரணத்து;ககு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிஷெல் பசெலெட் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியாக செயற்படுமாறு அவர் கோரியுள்ளார்

வார ராசிப்பலன் – மே 31 முதல் ஜுன் 6 வரை 2020

About அருள்

Check Also

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானில் 12 பேரை சுட்டு கொன்ற 2 ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானின் மேற்குப் பகுதியில் உள்ள ஹெரட் மாகாணத்தில் ராணுவ …