டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்கள் முன்னிலையில் பகிரங்கமான கோரிக்கை

டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்கள் முன்னிலையில் பகிரங்கமான கோரிக்கை

டக்லஸ் தேவானந்தா அவர்களுக்கு எமது மக்கள் முன்னிலையில் பகிரங்கமான கோரிக்கை

தயவு செய்து உங்கள் தேர்தல் வெற்றிக்காக வாக்குகளை இலக்கு வைத்து தேர்தல் பிரச்சாரங்களின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் போராட்டத்தையும் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையும் விமர்சிப்பதை தொடர்கிறீர்கள் தயவு செய்து தரங்கெட்ட உங்கள் நடைமுறையை உடன் கை விடுங்கள்
ஏற்கனவே இந்திய ஊடகங்களுக்கு நீங்கள் செவ்வி வளங்கியது தொடர்பாக நான் உங்களோடு நேரில் தொலைபேசியில்பேசியுள்ளேன்.

நீங்களே கூறியுள்ளீர்கள் எமது தலைவர் வே.பிரபாகரனை இனிமேல் நீங்கள் விமர்சிக்க மாட்டீர்கள் என்று குறைந்த பட்டசம் உங்கள் வாக்குறுதியை நீங்கள் காப்பது உங்கள் கடமையாகும்.

தமிழீழப் போராட்டத்தில் பல சரிபிழைகள் கடந்த காலங்களில் நடைபெற்றிருக்கிறது அனைத்து இயக்கங்களது செயற்பாடுகளும் ஒட்டு மொத்தத்தில் எமது மக்களையே பாதித்திருக்கிறது
ஒவ்வொரு ஈழப்போராளிகளும் தமிழீழ மக்களின் பிள்ளைகளே அந்த வகையில் உங்கள் பாதை சரியென்று ஏற்பவர்களோடு நீங்கள் பயணியுங்கள் உங்கள் அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தை பற்றி நீதியற்றவகையில் விமர்சிப்பதை தொடரவேண்டாம்என்று மீண்டும் மீண்டும் வினையமாக கேட்டுக்கொள்கிறோம்.

எமது தலைவர் உண்மையான நேர்மையான ஒழுக்கமான சிறந்த மனிதன் என்பதையும் அவரின் நேரடி வழிநடத்தலில் தவறுகள் எதும் பெரிதாக நிகழ்ந்ததில்லை என்பதையும் நான் உங்களுக்கு ஏற்கனவே விளக்கியுள்ளேன் நீங்களும் அதை ஏற்றுக்கொண்டீர்கள் உங்கள் தம்பி மட்டுமல்ல நாம் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட அண்ணன் தம்பி சகோதரிகளை எமது தலைவரை நம்பி அவரது வழி நடத்தலை ஏற்று தமிழீழ மீட்பு போரில் இழந்திருக்கிறோம் அதைவிட இலட்சக்கணக்கான எமது மக்களை இழந்திருக்கிறோம்

மீண்டும் கூறுகிறேன் விடுதலைப்புலிகள் இயக்கமானது போராளிகளுக்கும் மக்களுக்கும் வழங்கிய வாக்குறுதியை ஒவ்வொரு உண்மையான விடுதலைப்புலி வீரனும் உயிருள்ள வரை காப்பாற்றுவோம் வடிவங்கள் மாறலாம் எமது இலட்சியம் மாறாது காலத்தின் ஜெதார்த்தங்களை மதித்து நாம் தொடர்ந்து செயற்படுவோம் இறுதியாக ஒருவன் நான் விடுதலைப்புலி என்று எண்ணும் வரை புலிகள் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது முள்ளிவாய்க்காலோடு எமது விடுதலை இயக்கம் தனது ஆயுதப்போராட்டத்தை முற்றாக கை விட்டிருக்கிறது நாமும் இன்று சனநாயக வழியில்தான் நிற்கிறோம்.

முள்ளிவாய்க்கால் வரையான எமது ஆயுதப்போராட்டமும் எமது தலைவரின் வழி நடத்தலும் அப்பழுக்கற்ற தூய்மையான ஆயுத வழி உரிமைப்போராட்டமாகவே நிகழ்ந்தது சில தவறுகள் நிகழ்ந்திருக்கிறது நீங்கள் வசைபாடுமளவிற்கு விடுதலைப்புலிகள் செயற்பாடு இருக்கவில்லை அதை பகிரங்க விவதாத்தில் என்னால் நிறுவிக்கூற முடியும் தேவைப்பட்டால் ஊடகங்கள் முன் நான் உங்களோடு விவாதிப்பதற்கு தயாராகவே உள்ளேன் ஆகவே தயவு செய்து இனிமேல் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்பாகவோ எமது தலைவர் மேதகு வே.பிரபாகரன் தொடர்பாகவோ நீங்கள் ஒத்துக் கொண்டதற்கிணங்க விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்பதை மீண்டும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கொள்கிறேன்.

நன்றி
ம.முல்லைமதி

About அருள்

Check Also

போராளிகள்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர்

போராளிகள் அனைவரும் ஒண்றிணைவர் எதிர்வரும் காலங்களில் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக விடுதலைப்புலிகள் மக்கள் …