Breaking News
கருணாநிதியின் உடல்நிலை

கருணாநிதியின் உடல்நிலை: நலம் விசாரித்தார் ராகுல் காந்தி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கு தொற்றால் அவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நலமும் நலிவுற்றுள்ளது. இதனையடுத்து அவரது உடல்நலம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நலம் விசாரித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார். அதேபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

அந்தவகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …