Friday , January 18 2019
Home / இந்தியா செய்திகள் / ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம்
ஒன்றிணைந்து விரைவில்

ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம்

எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை பெருமளவு உயர்ந்ததால் அனைவரிடமும் கடும் அதிருப்தி எழுந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மீது பெரும்பான்மையான மாநில மக்கள் பெரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் முழு அடைப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் தங்களின் ஆதரவை அளித்து போராட்டத்தை நடத்தி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், நல்ல நோக்கத்திற்காக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மோடி அமைதியாக இருக்கிறார். பொருளாதாரத்தை, விவசாயிகளை, பெண்களை மோடி இருளை நோக்கி தள்ளியுள்ளார். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக சிறு, நடுத்தர தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அனைவரும் ஒன்றிணைந்து விரைவில் பாஜகவை வீழ்த்துவோம் என்றார்.

Check Also

புதிய அரசமைப்பு முயற்சியிலிருந்து பின்வாங்கமாட்டோம்!

“தடைகள் வரும்போது அஞ்சமாட்டோம். அதைத் தகர்த்து அனைவரினதும் மனதையும் வெல்வோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் பணிகளிலிருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம். …