Breaking News
Home / Uncategorized / ராஜஸ்தான் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி.

ராஜஸ்தான் 4 விக்கெட்டுக்களினால் வெற்றி.

Spread the love

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கி 175 ஓட்டங்களை குவித்தது.
176 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து கொல்கத்தா அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை கடந்தது.

ராஜஸ்தான் அணி சார்பில் ரகானே 34 ஓட்டத்தையும், சஞ்சு சம்சன் 22 ஓட்டத்தையும், ஸ்டீபன் ஸ்மித் 2 ஓட்டத்தையும், பென் ஸ்டோக்ஸ் 11 ஓட்டத்தையும், பின்னி 11 ஓட்டத்தையும், ஸ்ரேயஸ் கேபால் 18 ஓட்டத்தையும், ரியான் பராக் 47 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் ஆடுகளத்தில் ஜெப்ர ஆர்சர் 27 ஓட்டத்துடனும், உனாட்கட் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
பந்து வீச்சில் கொல்கத்தா அணி சார்பில் சாவ்லா 3 விக்கெட்டுக்களையும், சுனில் நரேன் 2 விக்கெட்டினையும், ரஸல் மற்றும் கிருஷ்னா தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

Check Also

டாஸ்

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த தல தோனி!

Spread the loveஇன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான இரண்டாவது பிளே ஆஃப் போட்டிக்கான டாஸ் …