தமிழ்நாடு செய்திகள்இலங்கை செய்திகள்முக்கிய செய்திகள்

இலங்கை வருவதற்கு ரஜினிக்கு விசா இல்லை!

- சிங்களப் பத்திரிகையில் செய்தி

தமிழக திரைப்பட் நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படமாட்டாது என இலங்கை அரச உயர்மட்டத் தகவலை மேற்கோள்காட்டி ‘திவயின’ என்ற சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்றிருந்த வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஈழ ஆதரவாளர்களைச் சந்திக்க வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த அழைப்பை ரஜினிகாந்த் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும், விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்த ரஜினிகாந்த, இலங்கை இராணுவத்துக்கு எதிராக இந்தியப் படைகளை அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார் எனவும் அந்தச் சிங்களப் பத்திரிகையின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் நடவடிக்கைக்காகவே ரஜினிகாந் இலங்கை அழைத்து வரப்படுகிறார் என்றும், அத்தகைய நடவடிக்கைக்கு விசா வழங்கப்படமாட்டாது எனவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Tags
Show More

Related Articles

Back to top button
Close