சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

லைக்காவை சீண்டும் ரஜினி ரசிகர்கள்

'தர்பார்' வசூல் எவ்வளவு...?

லைக்காவை சீண்டும் ரஜினி ரசிகர்கள்

தர்பார் படத்தின் வசூல் என்ன என்று லைக்கா நிறுவனத்திடம் ரஜினியின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9-ம் தேதி திரைக்கு வந்த படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைப்பில் உருவாகியிருந்த தர்பார் திரைப்படத்தில் ரஜினிகாந்த் மும்பை மாநகர காவல் ஆணையராக நடித்திருந்தார் .

மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் திரைக்கு வந்த தர்பார் திரைப்படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தர்பார் திரைப்படத்தின் வசூல் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தாலும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதனால் , படத்தின் வசூல் அறிவிப்பு குறித்து எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரஜினி ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.மேலும் தற்போது லைக்கா நிறுவனம் டுவிட்டரில் பதிவிடக் கூடிய ஒவ்வொரு பதிவிற்கும் கீழே சென்று தர்பார் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைக்கா நிறுவனம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று கோபத்துடன் பதிவிட்டு வருகன்றனர்.

இரு இந்தியர்களுக்கு ’கொரோனா வைரஸ்’ அறிகுறி…?

 

Tamil News
Tamilnadu News
World Tamil News

Tags
Show More

Related Articles

Back to top button
Close