Breaking News
ரஜினி கட்சியில்

ரஜினி கட்சியில் ரங்கராஜ் பாண்டே? பதில் இதுதான்!

ரங்கராஜ் பாண்டே உங்கள் கட்சியில் இணைய இருக்கிறாரா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றின் உயர் பதவியில் இருந்த ரங்கராஜ் பாண்டே, சமீபத்தில் தன் வேலையை ராஜினாமா செய்துள்ளார்.

ஒரே இடத்தில் பணி செய்வது ஒரு வித சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அடுத்த தலைமுறைக்கு வழி விடுவதற்காகவே இந்த முடிவு என்றும் வீடியோ மூலம் பாண்டே விளக்கம் கொடுத்திருந்தார்.

இருப்பினும், ரஜினி இல்லத்தில் அவரை சந்தித்து பாண்டே ஆலோசனை நடத்தியதாகவும், ரஜினி தொடங்க இருக்கும் கட்சியின் தலைமை ஆலோசகராக பாண்டே இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியிடன் பாண்டே குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி, “ரங்கராஜ் பாண்டே என் கட்சியில் சேரப்போவதாக வந்த தகவல் உண்மையில்லை. அது எல்லாம் வதந்தி” என தெரிவித்துள்ளார். 

About அருள்

Check Also

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020)

Today rasi palan – 26.08.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஆகஸ்ட் 26, 2020) இன்றைய பஞ்சாங்கம் …