Wednesday , August 21 2019
Breaking News
Home / சினிமா / ‘பேட்ட’ டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள்
பேட்ட

‘பேட்ட’ டிரைலர் நாளை வெளியீடு ! உற்சாகத்தில் ரசிகர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் டிரைலர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ‘2.0’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட’.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.

இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா நடித்துள்ளனர். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, நவாஜுதீன் சித்திக் என நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ‘பேட்ட’ படத்தின் சூட்டிங் வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடெக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘மரண மாஸ்’ என்ற பாடலை கடந்த மாதம் 3-ம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதனையடுத்து படத்தின் டீஸர் ரஜினி பிறந்தநாளில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து ‘பேட்ட’படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதில் பேசிய ரஜினி, ”விஜய் சேதுபதியை பார்த்திருக்கேன். நல்ல நடிகன் என்று நினைத்து இருந்தேன். ஆனால் பழகிய பிறகுதான் தெரிந்தது அவர் மகா நடிகன்.

அதேபோல் நல்ல மனிதன். நீண்ட நாள் கழித்து நல்ல நடிகனோடு நடித்த திருப்தி ஏற்பட்டுள்ளது. திரிஷாவுக்கு மிகச்சிறிய கதாப்பாத்திரம் தான்.

அவர்கள் எப்படி இதில் நடிப்பார்கள் என்று கேட்டேன். ஆனால் அவர் இதை மிகவும் விரும்பி நடிக்க ஒப்புக்கொண்டார்கள்.

இன்னமும் இளமையாகவே திரிஷா காட்சியளிக்கிறார். அதற்கு யோகா செய்வதே காரணம் என தெரிவித்தார்.” என அனைத்து நடிகர் நடிகைகளை பற்றியும் பேசினார்.


பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

Check Also

வனிதா

வனிதாவுக்கு என்ன ஆச்சு? பள்ளி டாஸ்க்கில் சொதப்பியதால் பரபரப்பு!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!1Shareபிக்பாஸ் வீட்டில் நேற்று முதல் நடைபெற்று வரும் கிண்டர் கார்டன் பள்ளி டாஸ்க்கில் லாஸ்லியா, சாண்டி, ஷெரின் …