முக்கிய செய்திகள்சினிமா செய்திகள்

குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற ரஜினி!

சத்யம் திரையரங்கில் குடும்பத்துடன் படம் பார்க்க சென்ற ரஜினி குடும்பத்தாரின் கீழ்த்தரமான செயல் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

 பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த மாதம் 29ம் தேதி வெளியான 2.O படம் முதலீடு செய்த அளவிற்கு கல்லா கட்டவில்லை என்றாலும், திரையரங்கை விட்டு ஓடாமல் தாக்குபிடித்துக் கொண்டிருக்கிறது.

தியேட்டர் கூட்டமே இல்லாத நேரத்தில் தனது மனைவி லதா மற்றும் பேரப்பிள்ளைகளோடு சத்யம் திரையரங்கில் பார்த்தார் ரீல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

ரஜினி தன் குடும்பத்தோடு படம் பார்த்த அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

ரஜினி ரசிகர்களும் அந்த புகைப்படத்தை ஷேர் செய்து வந்தனர் . அப்படி என்னதான் அந்த புகைப்படத்தில் இருக்கிறது என ஆராய்ந்து பார்த்தால், ரஜினி மற்றும் குடும்பத்திற்கு பின்னால் ஒரு பெண் நின்றுகொண்டே படம் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அந்த பெண் சூப்பர்ஸ்டார் வீட்டில் பணிப்பெண் எனவும் அவர் மொத்த படத்தையும் நின்றுகொண்டே பார்த்தார் என்றும் கூறப்படுகிறது.

ஆளே இல்லாத  தியேட்டரில்  மொத்த சீட்டும் காலியாக இருக்கும் போது, அந்த வேலைக்காரப்  பெண்ணை அமர வைக்காமல்,  நிற்க வைத்த படியே படம் பார்க்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சமூகவலை தளங்களில் தாறுமாறான விமர்சனங்கள் எழுந்துள்ளது. 

சிஸ்டத்தை சரி பண்ண வந்த ஆன்மீகம், தன் வீட்டு வேலைக்காரச் சிறுமியை நிற்க வைத்து படம் பார்க்கச் செய்த படமும், செய்தியும் இணையத்தில் தீயாக பரவி வருகிறது .

Tags
Show More
Back to top button
You cannot copy content of this page
Close