Breaking News

வன்முறையும் கலவரமும் வழிமுறை ஆகக் கூடாது!

தேப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகா மாநிலம் மங்களூருவில் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இருவர் உயிரிழந்தனர்.

அதேபோல, உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையில் ஒருவர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் இன்று மாநிலம் முழுவதும் பரவலாக போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இந்தநிலையில், இதுகுறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள ரஜினிகாந்த், ‘எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது.

தேப்பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் வன்முறைகள் என் மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஈடுபட்ட மாணவர்களை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ரஜினிகாந்த் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கிளிநொச்சி விபத்தில் வயோதிபர் பரிதாபச் சாவு!

About அருள்

Check Also

Today rasi palan – 05.04.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (ஏப்ரல் 05, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)

Today rasi palan – 03.03.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (மார்ச் 03, 2021)   இன்றைய …