சினிமா செய்திகள்முக்கிய செய்திகள்

இணையத்தில் வெளியானது தர்பார்…

படக்குழு அதிர்ச்சி

தர்பார் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டண்யில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள படம் தர்பார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருப்பதால் படத்தின் முதல்நாள் முதல் காட்சியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் திரையரங்குகளில் குவிந்தனர். ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துக்கும் பஞ்சமில்லை.

படத்தைப் பார்த்து ரசித்த ரசிகர்களில் பெரும்பாலானோர் படத்தின் முதல் பாதி சிறப்பாக இருப்பதாகவும், இரண்டாவது பாதி கதையில் தொய்வு இருப்பதாகவும் கலவையான விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் படம் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. முன்னதாக, தர்பார் படத்தை இணையத்தளங்களில் வெளியிட தடைக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரன், தர்பார் திரைப்படத்தை 1370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை தாக்க திட்டமிட்ட பயங்கரவாதிகள்: கைது செய்த போலீஸார்!

சசிக்கலாவை சீண்டிய தர்பார் டயலாக்

Tags
Show More

Related Articles

Back to top button
Close